×

இழுபறி முடிவுக்கு வந்தது: அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு..!

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றம் கூடியது. பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதில் குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார்.

ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் களம் இறங்கினார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு குடியரசு கட்சியைச் சேர்ந்த மெக்கார்த்தி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 4 நாட்களில் 13 முறை ஓட்டெடுப்பு நடத்தியும் சபாநாயகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. அமெரிக்காவில் 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags : Kevin McCarthy ,Speaker ,US House of Representatives , The tug-of-war is over: Kevin McCarthy is elected Speaker of the US House of Representatives..!
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...